சபை நடவடிக்கை ஒத்திவைப்பு

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு  இன்று (20) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.

இதன்போது, சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவுசெய்யப்பட்டார். அவரது பெயரை  தினேஷ் குணவர்தன முன்மொழிந்தார்.

அதனை, எதிர்கட்சி சார்பில் ரஞ்சித் மத்தும பண்டார வழிமொழிந்த நிலையில், மஹிந்த யாப்பா அபேவர்தன போட்டியின்றி சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டார்.

இதனையடுத்து, மஹிந்த யாப்பா அபேவர்தன, சாபாநாயகர் ஆசனத்துக்கு சென்று புதிய சபாநாயகராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

அத்துடள், புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து, சத்திய பிரமாண அறிக்கையினை புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாசித்து சத்திய பிரமாணம் செய்தனர்.

பின்னர், புதிய சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார்.

அதனையடுத்து, புதிய சபாநாயகருக்கு சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்து உரையாற்றினார்.

இதனையடுத்து,  பிரதி சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது. ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய  பெயரை மஹிந்த அமரவீர முன்மொழிந்ததுடன், நிமல் லங்சா வழிமொழிந்தார்.

பிரதி சபாநாயகர் பதவிக்கு வேறு யாருடைய பெயர்களும் முன்வைக்கப்படாத நிலையில், ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பிரதி சபாநாயகராக போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதனையடுத்து, குழுக்களின் பிரதி தவிசாளராக அங்கஜன் இராமநாதன் தெரிவுசெய்யப்பட்டார்.  இந்த பதவிக்கு மாற்று நபர்

பரிந்துரைக்கப்படாத நிலையில், குழுக்களின் பிரதி தவிசாளராக அங்கஜன் இராமநாதன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, ஜனாதிபதியின் கொள்கை அறிக்கை பிரகடனத்துக்காக இன்று பிற்பகல் 03 மணிக்கு சபை நடவடிக்கைககள்

ஆரம்பமாகவுள்ளதாக தெரிவித்து சபை நடவடிக்கைகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஒத்திவைத்தார்.